சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, நான்கு மாத கர்ப்பிணியான 25 வயதுப் பெண்ணுக்கு, ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், உறவினர் மூலம் கள்ளக்குறிச்சியில் நாராயணன் என்பவர் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சேலம் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் நந்தினி விசாரணை மேற்கொண்டார். இதில் மதுபாலா, புவனேஸ்வரி, கௌரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியான கள்ளக்குறிச்சி நாராயணனை தலைவாசல் போலீசார் கைது செய்தனர்.