சேலம் மாவட்டம் கெங்கவல்லியில், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தாத திமுக அரசை கண்டித்து அதிமுக கூட்டணி கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கிராமப்புற மக்களுக்கு தொடர்ந்து வேலை வழங்காமலும், முறையாக சம்பளம் வழங்காமலும் இழுத்தடிக்கும் திமுக அரசை கண்டித்து கைகளில் பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர். இதில் அதிமுக, பாஜக, பாமக, காங்கிரஸ், ஐஜேகே உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.