சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் ஆத்தூர் மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை காதலித்து, இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உறவினர் வீட்டில் தங்க வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவியின் பெற்றோர் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, மின்வாரிய ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.