வீரகனூர் அரசு பள்ளியில் கால்நடை கூடாரம்

9பார்த்தது
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வீரகனூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் குப்பைகள் நிறைந்தும், கால்நடைகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. இதனால் பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளி குழந்தைகள் நாளை பள்ளிக்கு வர உள்ள நிலையில், பள்ளியில் கால்நடைகள் கூடாரமாக அமைந்துள்ளது குறித்து உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி