கெங்கவல்லி மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி எடுத்த பக்தர்கள்

0பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி நடுவலூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் வைகாசி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உருள தண்டம் போடுதல், தீச்சட்டி எடுத்தல், கம்பி அலகு, கத்தி அலகு, தேர் அழகு போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தினர். மேளதாளங்கள் மற்றும் வான வேடிக்கை முழங்க அம்மன் வீதி உலா நடைபெற்றது. நடுவலூர், பள்ளக்காடு, கெங்கவல்லி, ஒதியத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.

தொடர்புடைய செய்தி