தம்மமப்பட்டி கூலி தொழிலாளி விபத்தில் மூளைச்சாவு உடல் தானம்

1பார்த்தது
தம்மமப்பட்டி கூலி தொழிலாளி விபத்தில் மூளைச்சாவு உடல் தானம்
சேலம் மாவட்டம், தம்மம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா (51) கடந்த 2-ம் தேதி திருச்சி சோபனபுரத்தில் அம்மாவைப் பார்க்கச் சென்றபோது, கல்லாங்குத்து சாலையில் பேரிகார்டில் மோதி தலையில் பலத்த காயமடைந்தார். திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த 12-ம் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. பின்னர், தம்மம்பட்டியில் அடக்கம் செய்ய கொண்டுவரப்பட்ட ராஜாவின் உடலுக்கு ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் தமிழ்மணி, வட்டாட்சியர் நாகலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் அரசு மரியாதை செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி