தலைவாசல் சிறுமியிடம் பாலியல் சீண்டல் முதியவர் கைது

1பார்த்தது
தலைவாசல் சிறுமியிடம் பாலியல் சீண்டல் முதியவர் கைது
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் பாட்டி வீட்டில் தங்கி பத்தாம் வகுப்பு படித்து வந்த நாமக்கல் மாவட்ட ராசிபுரத்தைச் சேர்ந்த சிறுமிக்கு, ஏரிப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றபோது அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மற்றும் அவரது பேரன் பாலியல் தொல்லை அளித்துள்ளனர். இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் மூலம் குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த பெரியசாமி நேற்று கைது செய்யப்பட்டார். அவரது பேனான 16 வயது சிறுவனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி