கெங்கவல்லி: மின்கசிவு.. வீடுகளில் மின்சாதனங்கள் வெடித்து விபத்து

62பார்த்தது
கெங்கவல்லி கூடமலை ஊராட்சிக்கு உட்பட்ட நரிப்பாடி கிராமத்தில், மலை அடிவாரப் பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களின் வீடுகள் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கோடை மழை, இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்று காரணமாக சேதம் ஏற்பட்டுள்ளது. கந்தசாமி மகன் செந்தில் குமார் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஸ்டெபிலைசர் போன்ற மின்சாதனப் பொருட்கள் வெடித்து சிதறியதோடு, துணிகள் மற்றும் பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.

தொடர்புடைய செய்தி