சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கீரிப்பட்டி கிராமத்தில் கிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான தகரக் கொட்டகை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிருஷ்ணன் உடனடியாக வெளியேறியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும், வீட்டில் இருந்த உடமைகள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து மல்லியகரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.