சேலம் மாவட்டம் கெங்கவல்லி இலுப்பு தோப்பு பகுதியில் உள்ள வடக்கு பள்ளிவாசல், தெற்கு பள்ளிவாசல், ஜிகேபி நகர் உள்ளிட்ட பள்ளிவாசல்களிலும், கெங்கவல்லி அருகே உள்ள நடுவலூர், 74 கிருஷ்ணாபுரம், கடம்பூர், கூடமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பக்ரீத் சிறப்புத் தொழுகையில் கலந்துகொண்டனர். தொழுகைக்குப் பிறகு, அனைவரும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.