கெங்கவல்லி பக்ரீத் முன்னிட்டு கால்நடை சந்தை1. 5கோடி வர்த்தகம்

648பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூர் கால்நடை சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் கொண்டு வந்த நாட்டு ஆடு, தலைச்சேரி, போயர் செம்மரி உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்தன. கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, மதுரை, நாமக்கல், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் இவற்றை வாங்கினர். 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது. 1500க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனை செய்யப்பட்டதில் சுமார் 1.5 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி