கெங்கவல்லி: கூலித் தொழிலாளி மர்மான முறையில் உயிரிழப்பு

546பார்த்தது
கெங்கவல்லி: கூலித் தொழிலாளி மர்மான முறையில் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, காட்டுக்கோட்டை, தீப்பெட்டி காலனி பகுதியைச் சேர்ந்தவர், திவ்யா(26). இவருக்கு, திருப்பத்தூரை சேர்ந்த, சேகர் என்பவருடன், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக, கணவரை பிரிந்து, தனது பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் திவ்யா வசித்து வருகிறார். 

இந்நிலையில், அரசநத்தம், கோவிந்தராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த, கூலித் தொழிலாளி முத்துபிரபு காட்டுக்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு திவ்யாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இரவு (நவம்பர் 28) திவ்யா வீட்டிற்குச் சென்ற முத்துபிரபு திருமணம் குறித்துப் பேசியதுடன், விஷம் குடித்துள்ளதாக கூறியுள்ளார். 

இதையறிந்த, திவ்யாவின் அக்கா கணவர் மணியரசன் முத்துபிரபுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த முத்துபிரபுவை, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் முத்துபிரபு உயிரிழந்தார். இதுகுறித்து, ஆத்தூர் ஊரக போலீசார், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.