தம்மம்பட்டி சிவன்கோவில் 36 ஆயிரம் ருத்ராட்சையில் லிங்க பூஜை

5பார்த்தது
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் கார்த்திகை தீபப்பெருவிழாவை முன்னிட்டு, 36 ஆயிரம் ருத்ராட்சங்களால் ஆன சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பொதுமக்கள் சார்பாக வாங்கப்பட்ட 50 ஆயிரம் ருத்ராட்சங்களில், 14 ஆயிரம் ருத்ராட்சைகளைக் கொண்டு நிரந்தர பந்தல் அமைக்கப்பட்டது. மீதமுள்ள 36 ஆயிரம் ருத்ராட்சைகளைக் கொண்டு சிவனடியார்கள் 12 மணி நேரம் சிவலிங்கத்தை அமைத்தனர். இரவு 7 மணிக்கு நடைபெற்ற பூஜையில் தேவாரம், திருவாசகப் பாடல்கள் பாடப்பட்டன. பங்கேற்றவர்களுக்கு சோழிகள், ஸ்டிக்கர்கள், சிறுவர்களுக்கு பலூன், பந்து, விசில் போன்ற அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. பள்ளியறை பூஜையுடன் விழா நிறைவுற்றது. தம்மம்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி