தம்மம்பட்டி விவசாய நிலத்தில் மருத்துவக் கழிவுகள்

66பார்த்தது
தம்மம்பட்டி விவசாய நிலத்தில் மருத்துவக் கழிவுகள்
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கோனேரிப்பட்டி செல்லும் வழியில் தம்மம்பட்டி பேரூராட்சியின் குப்பைகள் சேகரிக்கும் கிடங்கு உள்ளது. அந்த குப்பைக் கிடங்கிற்கு எதிரில் உள்ள விவசாய நிலத்தில் மருத்துவக் கழிவுகள், ஊசிகள், மருந்துகள் மற்றும் காலாவதியான மாத்திரைகள் ஆகியவற்றை கொட்டிச் சென்றுள்ளனர். இதனால் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அருகில் திருமண மண்டபம் மற்றும் பெருமாள் கோவில் உள்ளதால், பகுதியில் செல்லும் சிறுவர்கள் அவற்றை கையில் எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.

இதனால் நோய் தோற்று ஏற்படும் அச்சத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். மேலும் தகவல் அறிந்து வந்த சுகாதாரத் துறையினர் மருந்துகள் தனியார் மருத்துவமனையில் சேர்ந்த மருந்துகள் என தெரிவித்தனர். மேலும் இது குறித்து தம்மம்பட்டி பேரூராட்சி அலுவலர்கள் தம்மம்பட்டி பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளில் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி