கெங்கவல்லி கோவில் உண்டியிலை உடைத்து பணம் கொள்ளை

1513பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுவேத நதி தென்கரையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அக்கரை மாரியம்மன் கோவிலில், பூசாரி நவீன் நேற்று (மே 15) காலை கோவிலைத் திறக்கச் சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். கோவிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இது குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி