கெங்கவல்லி திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் எம்பி பங்கேற்பு

732பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் திமுக சார்பில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினரும் சேலம் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான சிவலிங்கம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வழங்கிய டோக்கன்கள் என்ன ஆனது என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளரிடம் கேள்வி எழுப்புமாறு அவர் பொதுமக்களை வலியுறுத்தினார். மேலும், மாற்றுக் கட்சியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

தொடர்புடைய செய்தி