சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கூலமேட்டில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழாவைப் போற்றும் வகையிலும், நினைவுச்சின்னம் அமைக்கும் வகையிலும், கூலமேடு நுழைவாயில் பகுதியில் ஏறுதழுவுதல் சிலை திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்தார். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இடைவிடாது நடைபெற்று வருவதாகவும், விழா குழுவினரும் ஊர் பொதுமக்களும் இணைந்து இந்த விழாவைச் சிறப்பாக நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.