கெங்கவல்லி விவசாய தொழிலாளர் சங்கம் மனு அளிக்கும் போராட்டம்

558பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி கடம்பூர் ஊராட்சி அலுவலகம் முன்பு, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறையாக வேலை வழங்கக் கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்க செயலாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் பயனளிக்க வேண்டும் என்றும், வேலை செய்த பணியாளர்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும், ஒன்றிய அரசு நிதியை முறையாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தொடர்புடைய செய்தி