சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தம்மம்பட்டியில், பொதுமக்களுக்கு இடையூறாக செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடை எண்: 7156-ஐ அகற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கடை முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். கடையை அகற்றக் கோரி முழக்கங்களை எழுப்பிய பெண்கள், ஒரு மணியை கடந்தும் கடையை திறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தம்மம்பட்டி போலீசார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.