கெங்கவல்லி அருகே தெடாவூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள், நடப்பு ஆண்டு பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் இலக்கிய நாடகம் மற்றும் வீதி நாடகம் என இரு பிரிவுகளிலும் தனித்தனியே முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று பள்ளியின் பிடிஏ தலைவர் வேல், தலைமை ஆசிரியர் குருநாதன், உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயபால், ரவிசங்கர் மற்றும் எஸ்.எம்.சி., பிடிஏ நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் சாதனை மாணவியரை பாராட்டி நினைவுப்பரிசுகள் வழங்கினர்.