சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நரிப்பாடி கிராமத்தின் வனப்பகுதி ஒட்டியுள்ள சாலையில் இரண்டு 6 அடி நீள மலைப்பாம்புகள் காணப்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இது குறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பாம்புகளைப் பத்திரமாகப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.