ஆத்தூர் ஏரியில் மண் கடத்தல் வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

0பார்த்தது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே சதாசிபுரம் கிராமத்தில் உள்ள பொன்னேரி கரை ஏரி வறண்டு காணப்படுகிறது. போதிய மழை இல்லாத நிலையில், பகல் மற்றும் இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரிகளில் மண் கடத்தப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விவசாய பயன்பாட்டிற்காக காவல் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட இடத்தில் அளவுக்கு அதிகமாக மண் எடுக்கப்படுவதாகவும், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி