சேலம் மாவட்டம் மேட்டூர் ராமமூர்த்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராமன் (வயது 56). தொழிலாளியான இவர், கோபுரம் காடு அருகில் நடந்து சென்ற போது கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்த அல்லு பிரசாத் (32), மேகநாதன் (28), பிரகாஷ் (26) ஆகிய 3 பேர் ராமனை வழிமறித்து 1,200 ரூபாயை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அவர் சத்தம் போடவே அவர்கள் தப்பி சென்றனர். இதுகுறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமனிடம் பணம் பறித்த 3 பேரை கைது செய்தனர். கைதான 3 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், ரவுடிகள் பட்டியலில் பெயர் உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.