சேலம் அருகே ராமகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான மோகன்குமார் (20) மற்றும் சஞ்சய் பாரதி (20) ஆகியோர் நேற்று இரவு சொந்த வேலை காரணமாக டூவீலரில் நங்கவள்ளிக்குச் சென்றுவிட்டு, இரவு 10 மணி அளவில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். வனவாசி அருகே வந்தபோது, எதிரே வந்த பால் வேனும், டூவீலரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோகன்குமார், சஞ்சய் பாரதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பால் வேனில் வந்த ஒருவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து ஜலகண்டாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.