மேட்டூர் அருகே வனவாசியில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, இன்று அப்பகுதி பொதுமக்கள் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தாத நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழக அரசைக் கண்டித்து நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த மேட்டூர் வட்டாட்சியர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களின் சமரசத்திற்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது.