மேட்டூரில் கட்டை, கத்தியுடன் சுற்றித்திரிந்த 5 பேர் கைது

1பார்த்தது
மேட்டூரில் கட்டை, கத்தியுடன் சுற்றித்திரிந்த 5 பேர் கைது
மேட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான குழுவினர், தெர்மல் நால்ரோடு அருகே ஜீவா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, உருட்டு கட்டை மற்றும் மடக்கு கத்தியுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த ஒரு கும்பலை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், ஜீவா நகரைச் சேர்ந்த மூர்த்தி (35), வசந்த் (38), பொன் நகரைச் சேர்ந்த ஜீவா (28), சரத் என்கிற சரத்குமார் (25), மற்றும் காவேரி பாலம் பகுதியைச் சேர்ந்த ராஜா (40) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் பாக்கெட்டில் மிளகாய் பொடி வைத்திருந்ததும், கொள்ளையடிக்கும் நோக்கில் இருந்ததும் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி