வீரக்கல் புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பருவம் தெருவில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றில் புதிய மின் மோட்டார் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. மேட்டூர் தொகுதி எம். எல். ஏ. சதாசிவம் இந்த திட்டப்பணியை தொடங்கி வைத்தார். இந்த புதிய திட்டம் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.