வனவாசி அருகேரூ. 5 கோடியில் கைத்தறி பூங்கா அமைக்க பூமி பூஜை

5பார்த்தது
வனவாசி அருகேரூ. 5 கோடியில் கைத்தறி பூங்கா அமைக்க பூமி பூஜை
சேலம் மாவட்டம், வனவாசி அருகே தாசகாப்பட்டியில் ரூ. 5 கோடியில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் காந்தி, ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தனர். மேலும், 86 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ. 37.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. கைத்தறி துறை இயக்குனர் மகேஸ்வரி, எம்.பி.க்கள் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கைத்தறித் துறை இணை இயக்குனர் கணேசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you