சிறுமியின் குடும்பத்திற்கு பாஜக தலைவர், மத்திய மந்திரி ஆறுதல்

1பார்த்தது
சிறுமியின் குடும்பத்திற்கு பாஜக தலைவர், மத்திய மந்திரி ஆறுதல்
கோவை சூலூரில் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய மந்திரி முருகன் நேரில் சென்றனர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், தி.மு.க. ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் தான் மக்கள் ஆட்சியை மாற்றியுள்ளனர் என்றும், தமிழக அரசு இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்கு முதல்-அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்தி