மேட்டூர் அருகே நர்சை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு

1பார்த்தது
மேட்டூர் அருகே நர்சை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்கு
மேட்டூர் மாதையன்குட்டையை சேர்ந்த கவுதமன்(28) மற்றும் கொளத்தூர் பகுதியை சேர்ந்த 22 வயது நர்ஸ் ஆகியோர் பழகி வந்துள்ளனர். இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்த நிலையில், அந்த நர்ஸ் கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நர்ஸ் வலியுறுத்தியபோது, கவுதமன் மறுத்துள்ளார். இதுகுறித்து மேட்டூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, கவுதமன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.