கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 21லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

1188பார்த்தது
கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 21லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
ஜலகண்டாபுரத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற வாராந்திர கொப்பரை தேங்காய் பருப்பு ஏலத்தில், மேட்டூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் 330 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தர கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 130.10 முதல் ரூ. 190.40 வரையிலும், இரண்டாம் தரம் கிலோ ரூ. 80 முதல் ரூ. 113.10 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ. 21.52 லட்சத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனதாக அலுவலர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி