ஜலகண்டாபுரத்தில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க உபகிளையில் வாரந்தோறும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறுகிறது. நேற்று நடந்த ஏலத்திற்கு 66 மூட்டை கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டன. இதில் முதல்தரம் கிலோ ரூ. 191 முதல் ரூ. 152. 10 வரையும், 2-ம் தரம் கிலோ ரூ. 131 முதல் ரூ. 105. 10 வரை விற்பனையானது. மொத்தமாக ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்திற்கு கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது.