மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் 16 கண் வழியாக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதனால் தேங்கிய தண்ணீரில் கடந்த மூன்று நாட்களாக டன் கணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சேலம் கலெக்டர் பிருந்தா தேவியிடம் தெரிவித்தனர். அவர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.