தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் சுனில் குமார் (17) மேட்டூர் சுற்றுலா வந்தபோது, காவிரி ஆற்றில் குளிக்கும்போது ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். மேட்டூர் தீயணைப்பு வீரர்கள் சடலமாக மீட்டனர். இதுகுறித்து மேட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.