கிருஷ்ணகிரி மாவட்டம் மருதப்பள்ளியைச் சேர்ந்த லாரி டிரைவர் கோவிந்தசாமி (36) மற்றும் கார்த்திக் ஆகியோர் நேற்று முன்தினம் மாதேஸ்வரன் மலை கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். மேச்சேரி-தொப்பூர் சாலையில் எதிரே வந்த லாரி மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், கோவிந்தசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.