மேட்டூர் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி

75பார்த்தது
மேட்டூர் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலி
மேட்டூர் தெர்மல் நால்ரோடு பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் (42), குஞ்சாண்டியூரில் மின்வாரியத்தில் ஒயர்மேனாகப் பணியாற்றி வந்தார். கோனூர் கிராமம் அருகே மின்சார கம்பியின் மீது முருங்கை மரம் விழுந்ததில் கம்பி அறுந்து விழுந்தது. அறுந்த கம்பியை இணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தியாகராஜன் மயங்கி விழுந்தார். அவரை மேட்டூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி