மேச்சேரி அருகே வெள்ளார் அரசமரத்தூர் பகுதியைச்சேர்ந்த சுதாகர் (39) என்ற விவசாயி, நேற்று தனது விவசாய நிலத்தில் தக்காளி தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச இரும்பு குழாயை எடுத்து சென்றபோது, மின் கம்பி மீது பட்டதால் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.