சேலம்: ரூ. 5½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்.. விவசாயிகள் மகிழ்ச்சி

72பார்த்தது
சேலம்: ரூ. 5½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்.. விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம் மாவட்டம் மேச்சேரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தின் உபகிளை ஜலகண்டாபுரத்தில் இயங்கி வருகிறது. திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமைகளில் இங்கு கொப்பரை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். இந்த ஏலத்தில் மேட்டூர், கொளத்தூர், மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், பூலாம்பட்டி, சிங்கம்பேட்டை, அம்மாபேட்டை, வனவாசி, பெருந்துறை, நரியம்பட்டி, அரியம்பட்டி, சின்னனூர், வாத்திபட்டி, ஊத்துக்குளி, காங்கேயம், முத்தூர், விஜயமங்கலம், வாழப்பாடி, அந்தியூர், தர்மபுரி, பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை ஏலத்திற்கு கொண்டு வருவார்கள். நேற்று நடந்த ஏலத்தில் கொப்பரை தேங்காய் முதல் தரம் கிலோ ரூ. 201 முதல் ரூ. 223 வரையும், 2-ம் தரம் கிலோ ரூ. 121 முதல் ரூ. 200 வரை விற்பனையானது. 2 ஆயிரத்து 799 கிலோ கொப்பரை தேங்காய் ஏலத்தில் ரூ. 5 லட்சத்து 62 ஆயிரத்துக்கு ஏலம் போனது என்று அதிகாரிகள் கூறினர்.

தொடர்புடைய செய்தி