சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கருப்பணம்பட்டி காலனி பகுதியை சேர்ந்த இளந்தென்றல் மற்றும் மனோஜ் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டதால் இரு குடும்பங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. நேற்று இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் இரு தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து, 4 பேரை கைது செய்தனர்.