மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் பணம் திருடியவர் கைது

63பார்த்தது
மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் பணம் திருடியவர் கைது
சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்த பாலமலையை சேர்ந்த கட்டிட தொழிலாளி சதீஷ், இவருடைய மனைவிக்கு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்திருந்தது. பிரசவ செலவுக்காக ரூ. 50 ஆயிரம், மனைவியின் கொலுசு, செல்போன் ஆகியவற்றை ஒரு பையில் சுருட்டி அவரது தலையில் அருகில் வைத்துக்கொண்டு ஆஸ்பத்திரியில் காத்திருப்போர் அறையில் தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது அவரது பையை காணவில்லை. 

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ், மேட்டூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆஸ்பத்திரியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை பார்வையிட்டு விசாரித்தனர். விசாரணையில், மேட்டூர் தாதையன்குட்டையை சேர்ந்த சஞ்சய் (வயது 25) என்பவர் சதீஷ் வைத்திருந்த பணப்பையை திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி