மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் மாசிமக தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் சின்ன தேரோட்டம் நடைபெற்ற நிலையில், நேற்று விநாயகர் தேர் மற்றும் பெரிய தேரோட்டம் நடைபெற்றது. கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், கிழக்கு ரதவீதி, சந்தைப்பேட்டை வழியாக கிராம சாவடி அருகில் நிறுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று காலை தேர் நிலை சேர்க்கப்படுகிறது. நாளை இரவு சத்தாபரணம் மற்றும் அம்மன் தாய் வீடான பொங்க பாலியில் இருந்து திருவீதி உலா நடைபெறுகிறது.