மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனங்களின் ஆண்டு விழா

52பார்த்தது
மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனங்களின் ஆண்டு விழா
சேலம் மாவட்டம் மேட்டூர் கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவன ஆண்டு விழா தொழிற்சாலையின் 3-வது பிரிவில் மனமகிழ் மன்றத்தில் நடந்தது. நிறுவன துணை நிர்வாக இயக்குனர் எம். எஸ். ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேட்டூர் தொழிற்சாலைகளின் தலைவர் (இயக்கம்) கஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் (பர்சனல்) சக்கரவர்த்தி வரவேற்றார். தொழிற்சாலைகளை தொடர்ந்து நீண்ட நாட்களாக பணியாற்றிய பணியாளர்கள் குடும்பத்துடன் விழா மேடைக்கு அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். 

விழாவில் தொழிற்சாலையின் அனைத்து பிரிவு தலைவர்கள், ஏனைய துறை தலைவர்கள், நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட கிரிக்கெட், கைப்பந்து, இறகு பந்து, செஸ், மேஜை பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கஜேந்திரன், எம். எஸ். ஆனந்த் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் கோவை பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி, மகிழ்ச்சி நம் கையில் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். துணைத்தலைவர் ஸ்ரீராம்குமார் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி