கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள 7 கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இயந்திரங்களின் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.