மேட்டூர் அணை நீர்மட்டம் 89. 4 அடியாக சரிவு

5பார்த்தது
மேட்டூர் அணை நீர்மட்டம் 89. 4 அடியாக சரிவு
தமிழக-கர்நாடக எல்லை காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், கர்நாடக அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைப் பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மாறி மாறி வருகிறது. நேற்று 72 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 61 கன அடியாக சரிந்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று 89.66 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று 89.46 அடியாக குறைந்துள்ளது. தற்போது அணையில் 52.03 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி