மேட்டூர் அணை நீர்மட்டம் 79. 93 அடியாக சரிந்தது

6பார்த்தது
மேட்டூர் அணை நீர்மட்டம் 79. 93 அடியாக சரிந்தது
தமிழக-கர்நாடக எல்லைப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து மாறிக்கொண்டே இருக்கிறது. நேற்று 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1144 கன அடியாகக் குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படும் நிலையில், நீர்வரத்தை விட திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று 80 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று 79.93 அடியாகக் குறைந்துள்ளது. அணையில் தற்போது 41.89 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.

தொடர்புடைய செய்தி