தீவிர வாக்காளர் திருத்த படிவம் வழங்கும் பணியை அமைச்சர் ஆய்வு

1559பார்த்தது
தீவிர வாக்காளர் திருத்த படிவம் வழங்கும் பணியை அமைச்சர் ஆய்வு
சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான கணக்கீட்டு படிவம் வழங்கும் பணியை சேலம் மாநகராட்சி 42 வது கோட்டத்திற்குட்பட்ட நாராயண நகர், சின்ன மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த பணியினை மிகுந்த கவனத்தோடு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார்.