பள்ளிப்பாளையம்: டூவீலர் திருடிய 2 பேர் கைது

5பார்த்தது
பள்ளிப்பாளையம்: டூவீலர் திருடிய 2 பேர் கைது
சேலம் மாவட்டம், தாரமங்கலம், மேட்டூரைச் சேர்ந்த ராஜா (25), ரமேஷ் (33) ஆகியோர், 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தண்டனை பெற்று சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் நண்பர்களான இருவரும், வெளியே வந்ததும் சேலத்தில் மூன்று, பள்ளிப்பாளையத்தில் ஒன்று என நான்கு டூவீலர்களைத் திருடியுள்ளனர். மேலும், தாஜ்நகர் பகுதியில் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப் பொருட்களையும் திருடியுள்ளனர். நேற்று காலை வெடியரசம்பாளையம் பகுதியில் பள்ளிப்பாளையம் போலீசார் இருவரையும் கைது செய்து, நான்கு டூவீலர்களையும் பறிமுதல் செய்தனர்.