சேலம் மாவட்டம், ஓமலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, நங்கவள்ளி துணை மின்நிலையப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நங்கவள்ளி, வீரக்கல், சாந்திபுரம், தோப்புத்தெரு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடும்.