சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே தெடாவூரில் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு காளை சீறி பாய்ந்ததில் இரு சக்கர வாகனம் சேதமடைந்ததை தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. பட்டியலின இளைஞரை தாக்கியதாக தமிழக வெற்றிக்கழக நகர செயலாளர் அருண் உட்பட 15 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், த.வெ.க. நிர்வாகி உட்பட பலரை கைது செய்யாமல் இருப்பதாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.