மேட்டூர்புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது

56பார்த்தது
மேட்டூர்புதிய அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கியது
சேலம் மாவட்டம் மேட்டூர் புதிய அனல் மின் நிலையம் 600 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. இந்த அனல் மின் நிலையத்தின் கொதிகலன் குழாயில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த மின் நிலையத்தில் நடைபெற்ற மின் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டது. இந்த பழுதை சீரமைக்கும் பணி முடிவுற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் மின் உற்பத்திக்கான ஆயத்த பணிகள் தொடங்கி உள்ளது. இரவில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

தொடர்புடைய செய்தி